School Morning Prayer Activity 18.10.2023

 School Morning Prayer Activity 18.10.2023  

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :280


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.


விளக்கம்:


உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.


பழமொழி :

East or west, home is best


எலி வளையானாலும் தனி வளை வேண்டும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 


2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


இரவு உணவு குறைத்திட ஆயுள் நீடிக்கும்.-- பல்கேரியா


பொது அறிவு :


1. உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு? 


இந்தியா


2. இத்தாலி நாட்டின் தேசிய மலர்? 


லில்லி


English words & meanings :


 gazette - news bulletin published by the government அரசு செய்தி இதழ். gene - the hereditary factor மரபியல் காரணி


ஆரோக்ய வாழ்வு : 


சங்குப்பூ:சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில்  பயன்படுபவை.


அக்டோபர் 18 இன்று


தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்


தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.


சார்லஸ் பாபேஜ் அவர்களின் நினைவுநாள்


சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். [1]கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.


நீதிக்கதை


 போராட்டமே வாழ்க்கை


ஒரு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இரண்டு சிறு எறும்புகள் அடித்துச் செல்லப்பட்டு மிதந்தன. ஒரு எறும்பு நதியில் குறுக்காக நின்று பிரவாகத்தைத் தடுக்க பெருமுயற்சி செய்து ”மேலே போக விடமாட்டேன் இந்த நதியை!” என்று கூறிக்கொண்டே குறுக்கே படுத்துக்கொண்டு கறுவியது. நதியின் வேகத்தினால் தாறுமாறாக அலைக் கழிக்கப்பட்டது. நதியின் போக்கில் மயிரிழை மாறுதல் செய்ய முடியாவிட்டாலும், ”நதியை எப்படியாவது நிறுத்தியே தீருவேன். உயிரே போனாலும் இந்த நதியை அடக்கியே தீருவேன்” என்று அலறிக்கொண்டே திணறியது. பாவம், அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது நதிக்கு அந்த எறும்பின் குரல் கேட்கவும் இல்லை. அதன் இருப்பை நதி உணரவும் இல்லை. மற்றொரு எறும்போ தன்னை அந்தப் பிரவாகத்தில் விட்டுவிட்டது. அது நதியின் குறுக்காக அல்ல, நேராகக் கிடந்தது நதி போகும் திசையில் மிதக்க வசதியாக, அதன் மனதில், தான் நதிக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்று எடுத்துக் கொண்டது. இந்த இரு எறும்பைப் பற்றியும் நதிக்குத் தெரியாது: எறும்புகளின் போக்கைப் பற்றியும் தெரியாது. நதிக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அந்தத் எறும்புகளுக்கு இருந்தது. நதியுடன் ஓடும் எறும்பு, நதியின் ஓட்டத்துடன் ஓட்டமாக ஓடிக்கொண்டே இருந்தது. நதியுடன் போராடும் எறும்போ வலியும், வேதனையும், துக்கமும் அலைக்கழிக்க உடலெல்லாம் ரணத்துடன் ஓடியது. நதியை ஒன்று ஏற்றுக் கொண்டது; மற்றொன்று எதிர்த்து போராடியது. போராடினால் வலி ஏற்றுக்கொண்டால் விடுதலை"


இன்றைய செய்திகள் - 18.10.2023


*விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து -14 பேர் உயிரிழப்பு : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு.



*வரதட்சணை தடுப்புச் சட்டப்படி கணவர், அவரது ரத்த உறவுகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் - மதுரை ஐகோர்ட்.



*தொடர் விடுமுறை காரணமாக பேருந்து, ரயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.



*ரஷ்ய அதிபர் புதின் சீனா பயணம்; அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கிறார்.



*ரோகித் சர்மா தான் அடுத்த டோனி ரெய்னா புகழாரம்.



*டென்மார்க், பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன்- பிரனாய் விலகல்.



Today's Headlines


*Virudhunagar firecracker factory accident - 14 people lost their lives: CM announces financial support.



*According to the Dowry Prevention Act, action can be taken only against the husband and his blood relations - Madurai High Court.


*Due to continuous holiday, all the seats in buses and trains are full for a week.


*Russian President Putin's visit to China; President Xi Jinping meets


*Rohit Sharma is the next Tony Raina tribute.


*Denmark, French Open Badminton- Pranai withdrawal.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.




0 Comments