ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.
ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
RL leave in August 2024 - ஆகஸ்ட்
03.08.2024, சனி - ஆடி பெருக்கு
16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்
19.08.2024, திங்கள் - ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்
20.08.2024, செவ்வாய் - காயத்ரி ஜெபம்
0 Comments