காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை

 காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை


.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ந் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்.

ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.



0 Comments