ஆச்சாம்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கிராமின் கூட்டா அமைப்பு மூலம் நன்கொடை

ஆச்சாம்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கிராமின் கூட்டா அமைப்பு மூலம் நன்கொடை
.

*ஆச்சாம்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கிராமின் கூட்டா அமைப்பு மூலம் நன்கொடை*

செங்கிப்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் கிரெடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட் மூலம் ஆச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 1 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.இப்பள்ளியில் இருந்து காவராப்பட்டுபள்ளிக்கு பணி மாறுதல் சென்றாலும் தனது 18 வருடம் பணிபுரிந்தபள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் மூலம் பள்ளிக்கு இப்பொருட்கள் கிடைத்துள்ள மையால் ஊர்மக்கள் ஆசிரியர்கள் அனைவரும்  பாராட்டினர் எனபதுகுறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு தேவையான மூன்று பீரோ, நான்கு டெஸ்க் பெஞ்ச்,  இரண்டு white Black board, நான்கு Book shelf, இரண்டு டேபிள் ,  இரண்டு S type சேர் போன்ற பொருட்கள் நேற்று மாலை பள்ளிக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய நல்குணம் கொண்ட அந்நிறுவனத்தை பள்ளி தலைமை ஆசிரியர் சுபத்ரா வரவேற்று வாழ்த்தி பேசினார். 

ஆசிரியர்கள், அலுவலக  பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊராட்சி மன்றம்  மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் வரவேற்று மரியாதை செய்து வாழ்த்தி மகிழ்ந்தனர். 




  விழாவில் கிரடிட் அக்சஸ் நிறுவன  Area manager பால்ராஜ் மாணவர்களுக்கு அந்நிறுவனம் உதவித்தொகை வழங்குவது பற்றி கூறியும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் எனவும் ஊக்கப்படுத்திபேசினார்.

செங்கிப்பட்டி மேனேஜர் மணிகண்டன்,அந்நிறுவன பணியாளர்களான ஜெயஶ்ரீ,வர்ஷினி, புண்ணிய மூர்த்தி,வினிதா,தவமணி, சரண்யா , ஆசிரியர்கள்  ஜஸ்டின் ஷீலா, ஜீவா, காமாட்சி, இரதிதேவி  செந்தில்குமார், அலுவலக பணியாளர்களான பாபுவிக்டர் , கஜேந்திரன் மற்றும் SMC தலைவி பாரதி , ராஜேஸ்வரி, தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் பள்ளியின் ஆங்கிலம் ஆசிரியர் தமிழ்வாணன் நன்றியுரையாற்றினார்.

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.



Post a Comment

0 Comments