பூதலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி

பூதலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி


பூதலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி.



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு. E. மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி

இன்று (02.09.2025) பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பூதலூர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் இன்று ஆறு குளங்கள் போன்ற நீர்நிலைகளில் நிகழும் பள்ளி மாணவர்களின் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திரு. M. அய்யாகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜெ.ஆர்.சி.-யின் திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் திரு. A. பிச்சைமணி அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார். தலைமையாசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகளும் நடத்த அறிவுறுத்தினார். உடன் ஜெ.ஆர்.சி. மாவட்ட இணை அமைப்பாளர் திரு. J. ஜேசுதாஸ் தமிழ்மாறன் அவர்கள் கலந்துகொண்டு் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளின் பெயர்களை அறிவித்து விரைவில் தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு செயல் விளக்கப் பயிற்சி ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் என்பதையும் தெரிவித்தார்.

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.




Post a Comment

0 Comments