சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 23 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திரு.சுபேதார்.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழாவில் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 23 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திரு.சுபேதார்.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழாவில் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
இந்திய ராணுவத்தில் 23 ஆண்டுகாலம் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஜபல்பூர் ராணுவ மையத்தில் இருந்து சொந்த ஊருக்கு வருகை தந்த வீரர்க்கு தஞ்சை ரயில்வே நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சை பர்மா காலனி அண்ணா நகரை சேர்ந்த வீரர் சுபேதார் ஆ. சுந்தரமூர்த்தி அவர்கள் இந்திய ராணுவத்தின் அங்கமான தொலை தொடர்பு துறையில் சிறப்பான முறையில் பணிகளை புரிந்து அதில் இளநிலை பொறியாளராக பணி உயர்வு பெற்று 23 ஆண்டுகாலம் தனது சேவைதனை நாட்டுக்கு அற்பணித்து பிறந்த மண்ணான தஞ்சைக்கு வந்தடைந்தார். அவரை தஞ்சையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவ படைகளை சேர்ந்த சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக வரவேற்று பொன்னாடை போர்த்தி, சந்தன மாலைகள் அணிவித்து பழ கூடைகளை பரிசளித்து, நினைவு கேடயம் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் இயன்றததை செய்வோம் இல்லாதோருக்கு, இயற்கையை காப்போம் இல் வாழ்க்கையோடு என்ற சோழநாட்டு பட்டாளத்தின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் ரயில்வே நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும் அங்கு நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் வீரர் ஆ. சுந்தர மூர்த்தி அவர்கள் தஞ்சை மனோஜிபட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, ஒரத்தநாடு காவராப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயில்கின்ற தாய் தந்தையை இழந்த மாணவ ,மாணவிகள் 14 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் வாழ்த்துக்களுடன் மிதி வண்டிகளை பரிசாக வழங்கியும் ஒரு மாற்று திறனாளி மாணவ செல்வத்திற்கு மருத்துவ செலவிற்கு ரூபாய் 5000/- நன்கொடை வழங்கியும் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவருக்கு கல்வி உபகரணங்கள், மற்றும் உடைகள் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீரரின் உறவினர்கள், அரசு பள்ளி ஆசிரிய பெருமக்கள் ,மாணவ செல்வங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் திரளாக கலந்து கொண்டு வீரரை வாழ்த்தி வணங்கி பெருமைப்படுத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.
0 Comments