100 % வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
*100 % வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது* ஒரத்தநாடு அருகே அரசு உயர்நிலைப் பள்ளி ஆழி யவாய்க்கால் நத்தம் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கோ. திருமுருகன் அவர்கள் தொடங்கி வைத்தார் விழாவில் சேதுராயன் குடிக்காடு கிராம நிர்வாக அலுவலர் திரு. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று நாடக மேடையில் நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை ஒரத்தநாடு ஒன்றிய ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் திரு தமிழ்வாணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. சரவணன் அவர்கள் செய்திருந்தார் விழாவில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் எனது வாக்கு எனது உரிமை, வாக்களிப்பது ஜனநாயக கடமை, எனது வாக்கு எனது வலிமை உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் திரு. அன்பழகன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அவர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் திரு .வி. அண்ணாதுரை தமிழாசிரியர் அவர்கள் நன்றி கூற விழா நிறைவுற்றது.










0 Comments