பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
2011-12-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 710 ஊராட்சி, ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 ஆசிரியர் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த 4,970 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வருகிற 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையிலான 5 ஆண்டுகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதேபோல், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின்கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. அந்த 1,282 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு (2029 ஜூன் மாதம் வரை) தொடர் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.
0 Comments