ஒரத்தநாட்டில் JRC ஜெனிவா ஒப்பந்தம் நாள் விழா கொண்டாட்டம்

ஒரத்தநாட்டில் JRC ஜெனிவா ஒப்பந்தம் நாள் விழா கொண்டாட்டம்




ஒரத்தநாட்டில் JRC ஜெனிவா ஒப்பந்தம் நாள் விழா கொண்டாட்டம்.



பள்ளிக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம் - ஜூனியர் ரெட் கிராஸ், ஜெனிவா ஒப்பந்த நாள் விழா ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒரத்தநாடு ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் விழா இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்களும் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் முன்னதாக ஜூனியர் இருக்கு ஒரத்தநாடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.அ. தமிழ்வாணன் வரவேற்புரை  யாற்றினார்,இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க  கல்வி அலுவலர் திரு. வ. மதியழகன் ஜே ஆர் சி கொடியேற்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார், வட்டார கல்வி அலுவலர்  திரு. க. தமிழ்வாணன் மற்றும் திருமதி.கா.லதா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினர். ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூணான்ட் திருவுருவப்படத்தை ஒரத்தநாடு ரெட் கிராஸ் செயலர் திரு.எஸ். சுரேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்தியனுக்கு சொசைட்டி ஒரத்தநாடு கிளையின் தலைவர் திரு .வி. நாராயணசாமி அவர்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். ஆயுட்கால உறுப்பினர் திரு. த. செல்வம் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் முத்தம் பால் சத்திரத்தின் சார்பாக வழங்கப்பட்ட ஜே. ஆர்.சி. தகவல் கையேட்டினை  மாவட்ட கல்வி அலுவலர்கள் வெளியிட அதனை ஜே ஆர் சி மாவட்ட இணை அமைப்பாளர் திரு.K. பாலமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

திருச்சி மண்டல ஜெயா அரசு ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் கல்வி மாவட்ட ஜே ஆர் சி ஒருங்கிணைப்பாளருமான திரு.அ. பிச்சைமணி அவர்கள் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா விளக்க உரையாற்றினார். ஜெனிவா ஒப்பந்த நாள் விழா தகவல் கையேட்டியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வெளியிட தனியார் பள்ளியில் ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் செல்வி.A. இளவரசி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் மாவட்ட விழாவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் முத்தம்பள் சத்திரத்தின் சார்பாக வாட்டர் பாட்டில் மற்றும் முன்னாள் மாணவர் முதுகுளம் ஆர்ஆர் ரவி சார்பாக மாணவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றும் வழங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ஒரத்தநாடு வட்டார கௌரவ தலைவரும் வட்டாட்சியருமான திரு.எஸ்.யுவராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். 





விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் திரு. பா .செந்தில் , ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு .V. செந்தமிழ் செல்வன், இளம் தொழிலதிபர் திரு. அண்ணாதுரை சௌந்தரமாறன் ஆகியோர்  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்  பாராட்டினர். விழாவில் கிராம நிர்வாக அலுவலர் திரு. விஜயபாஸ்கர், ஆயுட்கால உறுப்பினர் H.மன்சூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழாவின் இறுதியில் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.N. ரெகுபதி அவர்கள் விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். இனிதே நிறைவுற்றது.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments