Breaking

Monday, 17 August 2026

ஜெனிவா ஒப்பந்த நாள் விழா


ஆழியவாய்க்கால் நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் திருமதி.கா. சினேகலதா அவர்கள் கொடியேற்ற ஆரம்பித்த இவ்விழாவில் மாணவர்கள் சிறப்பாக காலை வழிபாட்டு கூட்டம் நடத்தினர். தமிழ் ஆசிரியர் அண்ணாதுரை அவர்கள் ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூணான்ட் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான 
முழக்கங்களுடன் மாணவர்கள் பேரணி நடத்தினர். 

பேரணியை போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்ற பொறுப்பாசிரியர் திருமதி.கவிதா அவர்கள் தொடங்கி வைத்தார். விழாவில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா, உலகளாவிய அமைப்பான ரெட்கிராஸ் இயக்கம் பற்றிய விளக்கங்களும், ரெட் கிராஸ் நிறுவனர் வரலாறு வாழ்க்கை குறிப்புகள், சால்பெரினோ நினைவுகள் மற்றும் ஜெனிவா ஒப்பந்தங்கள் பற்றி ஒரத்தநாடு ஒன்றிய ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் உரையாற்றினார் விழாவின் இறுதியில் கல்வி வழிகாட்டி ஆசிரியர் திருமதி. மிதிலைச்செல்வி அவர்கள் நன்றி கூறினார்.







No comments:

Post a Comment