பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு-Decision taken to seek details on caste, religion, and Aadhaar during the population census in February - www.usaed.in

பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு-Decision taken to seek details on caste, religion, and Aadhaar during the population census in February

பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு-Decision taken to seek details on caste, religion, and Aadhaar during the population census in February

அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட, 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளன.

நாடு முழுதும் ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, அந்த பணிகள் நடக்கவில்லை.

இந்த சூழலில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மக்கள்தொகை கணக்கொடுப்பு பணிகள் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளன. முன்னதாக, வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. அப்போது, பொது மக்களிடம், 33 வினாக்கள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள கணக்கெடுப்பின்போது, பொது மக்களிடம் கேட்கப்பட உள்ள வினாக்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, குடும்ப தலைவருக்கு உறவுமுறை, பாலினம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, தேசியம், மதம், ஜாதி, தாய் மொழி மற்றும் அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு, டிஜிட்டல் அறிவு நிலை.

அதிகபட்ச கல்வி நிலை, பொருளாதார நடவடிக்கை வகை, வேலை மற்றும் வேலை செய்யாதவர்கள், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடப்பெயர்வுக்கான காரணம், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இடம், வங்கி கணக்குகளின் மொத்த எண்ணிக்கை, கைபேசி எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பாஸ்போர்ட் எண், ஓட்டுனர் உரிமம் உட்பட, 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளன.


No comments:

Post a Comment