Local holiday declared for November 20th 2026-நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Local holiday declared for November 20th 2026-நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ள…
Local holiday declared for November 20th 2026-நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ள…
School Morning Prayer Activities 06.11.2026 பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்க…
TRUST - Examination Hall Ticket Notification 2026-TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு அறிவிப்பு
தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு (TRUST) – 2026 தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்
அனுப்புநர்:
திருமதி. கே.பி. மெக்ஸ்வரி, M.A., B.Ed.,
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை – 600 006.
பெறுநர்:
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (சென்னை நீங்கலாக),
அனைத்து மாவட்டங்கள்.
ந.க.எண். 009959/டி(3)/2026
நாள்: 11.11.2026
ஐயா / அம்மையீர்,
பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நவம்பர் 2026 – தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் – தொடர்பாக.
21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 12.11.2026 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் USER ID / PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்குத் தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், சிவப்பு நிற மையினால் பிழையினைச் சுழித்து சரியான திருத்தத்தினைக் குறிப்பிட்டு அப்பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பம் மற்றும் முத்திரையிட வேண்டும்.
அத்திருத்தங்களைத் தேர்வெழுத அனுமதித்து பெயர்ப்பட்டியலில் திருத்தங்களைச் சிவப்பு மையினால் மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒம்/-
இணை இயக்குநர் (பணியாளர்)
முக்கிய அறிவிப்புகள்
TRUST தேர்வு தேதி
2026
21.11.2026
சனிக்கிழமை
ஹால் டிக்கெட் பதிவிறக்கம்
12.11.2026
பிற்பகல் முதல்
அதிகாரப்பூர்வ இணையதளம்
No comments:
Post a Comment