ஒரத்தநாட்டில் 800 மேற்பட்ட JRC மாணவர்கள் பங்கேற்ற போதைஒழிப்பு பேரணியில் 1000 மரக்கன்றுகள் நினைவு பரிசு

ஒரத்தநாட்டில் 800 மேற்பட்ட JRC மாணவர்கள் பங்கேற்ற போதைஒழிப்பு பேரணியில் 1000 மரக்கன்றுகள் நினைவு பரிசு

ஒரத்தநாட்டில் 800 மேற்பட்ட JRC மாணவர்கள் பங்கேற்ற போதைஒழிப்பு பேரணியில் 1000 மரக்கன்றுகள் நினைவு பரிசு.

ஒரத்தநாட்டில் ஜே ஆர் சி மாணவர்கள் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா அமைதிப் பேரணி  நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் திரு.பா .செந்தில் அவர்கள் தலைமையில்,  ஒரத்தநாடு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் வி.நாராயணசாமி முன்னிலையில்,ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் திரு.C .முருகானந்தம் அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணியில் ஒரத்தநாடு பள்ளிகளைச் சேர்ந்த 800- க்கும் மேற்பட்ட மாணவர்களும் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் விழாவில் உலக அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை, போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைதி பேரணி நடைபெற்றது விழாவின் இறுதியில் திருச்சி மண்டல ஜே ஆர் சி ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் கல்வி மாவட்ட அமைப்பாளருமான திரு.அ. பிச்சைமணி அவர்கள் பேரணி நிறைவுறையாற்றினார்.
 பேரணியில்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் திரு. எஸ். சுரேந்தர் கிராம நிர்வாக அலுவலர் திரு.விஜயபாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுட்கால உறுப்பினர் திரு.H. மன்சூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழாவில் வந்திருந்த அனைவரையும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு.K. பாலமுருகன் அவர்கள் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு  முத்தம்பாள் மாணவர் இல்லம் முன்னாள் மாணவர்கள் சார்பாக வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது, அதேபோல முன்னாள் மாணவர் முதுகுளம் ஆர் ஆர் ரவி அவர்களால் அனைத்து மாணவர்களுக்கும் 1000 மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியாக விழாவிற்கு வந்து பேரணிக்கு வந்து சிறப்பித்த அனைவரையும் நடுநிலைப் பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் திரு .N. ரகுபதி அவர்கள்  நன்றி கூறினார் .விழா ஏற்பாடுகளை ஒரத்தநாடு ஒன்றிய ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் திரு. அ. தமிழ்வாணன் அவர்கள் செய்திருந்தார்.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments