CENSUS 2027 - Training Date Cascade - Tamil Nadu
CENSUS 2027 - Training Date Cascade - Tamil Nadu
CENSUS 2027 - Training Date Cascade - Tamil Nadu
திருப்பத்தூர் மாவட்டம் - முதுகலை (தமிழ்) ஆசிரியர் தேவை.. திருப்பத்தூர் மா…
8ஆவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருப்பது 8ஆவது சம்பள கமிஷன் குறித்து தான். புதிய சம்பள கமிஷன் இந்த ஆண்டு ஜனவரி முதலே அமலுக்கு வந்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டு மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் மற்றும் அரியர் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, புதிய சம்பள கமிஷன் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அதாவது குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அந்த இடைப்பட்ட காலத்தில் பணியில் இருந்த அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரியர் தொகை வழங்கப்படுவது வழக்கம். 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்பட வாய்ப்புள்ளதால், அந்த தேதிக்கு பிறகு ஆனால் பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஓய்வு பெறும் ஊழியர்கள், பணியில் இருந்த காலத்திற்குரிய பழைய ஊதியத்திற்கும், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஊதியத்திற்கும் உள்ள வித்தியாச தொகையை அரியர் பணமாக பெறுவார்கள்.
தற்போது வேலையில் உள்ள ஊழியர்களுக்கு சம்பள வித்தியாச தொகை அரியராக கிடைப்பது போல, ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதியத்திற்கும் திருத்தப்பட்ட புதிய ஓய்வூதியத்திற்கும் உள்ள இடைவெளியின் அடிப்படையில் அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் 8ஆவது சம்பள கமிஷன் படி, ஏற்கனவே ஓய்வு பெற்ற மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியமும் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம், ஜனவரி 2026-க்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு கிடைக்கும்.தற்போதைய நிலையில், சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் அது எந்த தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை.
சம்பள கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, மத்திய அமைச்சரவை எடுக்கும் இறுதி முடிவுகள் மற்றும் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அரசாணை அடிப்படையில்தான் யாருக்கெல்லாம் அரியர் தொகை மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் என்ற முழுமையான விவரம் வெளியாகும்.
தற்போதைக்கு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளது. அனைத்து தரப்பு கோரிக்கை மனுக்களையும் பெற்று சம்பள கமிஷன் பரிந்துரைகளை தயாரித்து வருகிறது. விரைவில் இது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதில் நிர்ணயிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் தான் எவ்வளவு மடங்கு சம்பளமும் ஓய்வூதியமும் உயர் போகிறது என்பதை தீர்மானிக்கும்.
No comments:
Post a Comment