தமிழகத்தில் பெற்றோரை விபத்தில் இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75000 உதவித்தொகை இலவசமாக மாணவர்களுக்கு விண்ணப்பித்து உதவும் அரசு பள்ளி ஆசிரியர் - www.usaed.in

தமிழகத்தில் பெற்றோரை விபத்தில் இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75000 உதவித்தொகை இலவசமாக மாணவர்களுக்கு விண்ணப்பித்து உதவும் அரசு பள்ளி ஆசிரியர்

தமிழகத்தில்  பெற்றோரை விபத்தில் இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு  ரூபாய் 75000 உதவித்தொகை இலவசமாக மாணவர்களுக்கு விண்ணப்பித்து இதுவரை 146 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சுமார் 1கோடியே 10லட்ச ரூபாய் அளவிற்கு உதவித்தொகை பெற்றுத்தந்து  அசத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்..

தமிழகத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்தம் பெற்றோர்கள் யாரேனும்.ஒருவரோ அல்லது இருவரோ எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர முடக்கமானாலோ அவர்கள் குடும்பத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூபாய் 75000 உயர் கல்வி பயில உதவித்தொகை வைப்பு நிதியாக வைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு  மற்றும் உயர்கல்வி பயில உதவித்தொகை பள்ளிக்கல்வித்துறை வழியாக விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த 2005 முதல் 50000 ஆயிரமாகவும் 2014 முதல் 75000 ஆயிரமாகவும் அரசு உதவி செய்து வருகிறது. இதற்காக அரசாணை 2005ல் இருந்து தமிழக அரசு பிறப்பித்து தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.(தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணைகள் 39,127/2005மற்றும் 195/2014)

இந்த உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளி வழியாகவே விண்ணப்பித்து பெற முடியும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை மாணவர்கள் அரசு..அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும்போது பெற்றோர் விபத்தில் இறந்தாலோ அல்லது முடக்கம் அடைந்தால் மட்டுமே இந்த உதவித்தொகை பெற அடிப்படை தகுதியாக உள்ளது.

தற்போது இந்த விண்ணப்பம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  சில வேறுபாடுகளுடன் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பம் இணைய வழியில் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

   மாநிலம் முழுவதும் விண்ணப்பிக்க பல மாணவர்கள் இந்த முறை குறித்து தெளிவாக தெரியாமல் விண்ணப்பிக்க சிரமப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் தொடக்க கல்வித்துறை சார்ந்த இராஜகிரி  குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பணிபுரிந்து.வரும்.பட்டதாரி ஆசிரியர் திரு L 
நாகராஜன்.அவர்கள்  தமது மாவட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு. அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பங்கள். தயார் செய்து கொடுத்து அவர்கள் 75000 ரூபாய் உதவித்தொகை பெற உதவி புரிந்து வருகிறார்.

இந்த விண்ணப்பங்கள் தயார் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் நகல்கள்  மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெற்று மாணவர்கள் பயின்று வரும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் அவர்தம் அனுமதி பெற்று விண்ணப்பங்கள் தயார் செய்து பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் உதவித்தொகை பெற உதவி செய்து வருகிறார் என்பது  சிறப்பான செயலாகும்.

இந்த விண்ணப்பங்கள்.அனைத்தையும் தனது சொந்த செலவில் தயார் செய்து சில நேரங்களில் தனது செலவிலேயே ஆவணங்கள் பிரதி எடுத்து இலவசமான சேவைகளை செய்து தருகிறார்.






அதுகடந்த 2022ல் ஆரம்பித்து இதுவரை சுமார் 146 மாணவர்களுக்கு நாள் தேதி வரை விண்ணப்பித்து சுமார் 1 கோடியே 9லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உதவித்தொகையை பாதிக்கபட்ட மாணவர்களுக்கு பெற்று தந்துள்ளது ஆசிரியரின் சேவை உணர்வை காட்டுகிறது.  இதுவரை தமிழக அளவில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார்.  மாநில அளவில் பாதிக்கபட்ட மாணவர்கள் இவரை தொடர்பு கொண்டு உதவி.கேட்டு அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்து வருகிறார்.

இதே போல அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி நிகழ்வில் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ 25000 முதல்.1 லட்சம் வரை இழப்பீடு அந்த மாணவர் குடும்பத்திற்கு தமிழக அரசாணை 17/2018ன்  படி இலவசமாக விண்ணப்பித்து பெற்று தர உதவி செய்வது.

இந்த உதவி மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்டங்களான அன்புக்கரங்கள்(பெற்றோரை இழந்த வறுமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 18 வயதுவரை மாதம் 2000 உதவித்தொகை)குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வழியாக வழங்கப்பட்டு வரும் திட்டம்.
மிஷன் வாத்சால்யா எனும் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு மதம் 4000 வழங்கும் மத்திய அரசின் உதவித்தொகையை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் வழியாக விண்ணப்பித்து மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் பெற இலவச உதவி மற்றும் வழிகாட்டுதல்  செய்துதருவது

பெற்றோர் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு  தமிழக அரசு வழங்கும் சாலை விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ் 1 லட்ச உதவி.

பெற்றோர்கள்  விபத்தில் இறந்திருந்து அவர்கள் வங்கி atm அட்டை இறப்பதற்கு முன்னர் பயன்படுத்தி இருந்தால் அவர்கள்.குடும்பத்திற்கு 1.5லட்சம் முதல் 2.லட்சம் வரை விபத்து காப்பீடு இழப்பீடு பெற உதவி செய்வது 

நல வாரியம் வழியாக விபத்து காப்பீடு இழப்பீடு பெற உதவிசெய்வது.

வெடி விபத்தில் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் ஒவ்வொரு படிக்கும் மாணவர்களுக்கும் மாதம் 2000 உதவித்தொகை 18 வயதுவரை பெற்றுத்தர இலவச.விண்ணப்பங்கள் தயார் செய்து அவர்களுக்கு உதவி செய்தல்.

என பலவித அரசின் நலத்திட்டங்களை பாதிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திட இலவசமாக  சேவை செய்து   வருகிறார்.

ஏழை மற்றும்  கல்விபயில சிரமப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவி செய்து  வரும் ஆசிரியரின் சேவையினை.நிச்சயம் பாராட்ட வேண்டும்.

ஆசிரியரின்.சேவைகும் அவரின் சேவை தொடர நல்வாழ்த்துகள் .

நீங்களும் பாராட்டலாமே.

உங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு சென்று ஆசிரியரை தொடர்பு கொள்ள உங்களுக்காக இதோ ஆசிரியரின் தொடர்பு விபரம்.

மாணவர்களுக்கான இலவச.சேவையினை பெற ஆசிரியர் அவர்களை  நீங்கள் தொடர்பு கொண்டு உதவிபெற 

L. நாகராஜன்
பட்டதாரி ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி
குளவாய்ப்பட்டி
விராலிமலை ஒன்றியம் 
புதுக்கோட்டை மாவட்டம்.
கைபேசி 9865149705.

No comments:

Post a Comment